மீண்டும் நடிக்க வருகிறார் கஜோல்!

தமிழில் ராஜீவ் மேனன் இயக்கிய 'மின்சாரக் கனவு' படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை கஜோல். பல திரைப்படங்களில் நடித்து எல்லா மொழி ரசிகர்களையும் கவர்ந்தார்.

கடைசியாக கரண் ஜோஹர் இயக்கிய 'மை நேம் இஸ் கான்' படத்தில் ஷாரூக் கான் ஜோடியாக நடித்தார். அதற்குப் பிறகு  சில படங்களில் சிறப்பு வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிப்பில் இருந்து விலகினார்.

தற்போது மீண்டும் ஒரு இந்திப் படத்தில் கஜோல் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்திருக்கிறது. கஜோலின் கணவரும் நடிகருமான அஜய் தேவ்கன்  இப்படத்தைத் தயாரிக்கிறார்.

" படத்தின் கதை பற்றி நான் எதுவும் கூற முடியாது. இப்படத்தை நான் தயாரிப்பைத் தவிர கதை போன்ற விஷயங்களில் நான் தலையிடவில்லை '' எனத் தெரிவித்திருக்கிறார் அஜய் தேவ்கன்.

கதாநாயகியை மையமாகக் கொண்ட இப்படத்தை விளம்பரப் பட இயக்குநர் ராம் மத்வானி இயக்குகிறார். அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!