இந்தியில் ரீமேக்காகும் ஜிகர்தண்டா! | Jigarthanda, KarthickSubburaj, Kathiresan, ஜிகர்தண்டா, கார்த்திக் சுப்புராஜ், கதிரேசன்

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (08/08/2014)

கடைசி தொடர்பு:12:25 (08/08/2014)

இந்தியில் ரீமேக்காகும் ஜிகர்தண்டா!

சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் 'ஜிகர்தண்டா'. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறும்போது, "படம் வெளியான இரண்டாவது வாரத்தில் மேலும் 60 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது. படம் வெளியானதிலிருந்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளது 'ஜிகர்தண்டா'.

திரைத்துரையிலிருந்தும் பல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் படத்தைப் பாராட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தை இந்தியில் தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் பேசி வருகின்றன. அவர்களுடன் இணைந்து 'ஜிகர்தண்டா' படத்தை இந்தியில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

மேலும், ரஜினி நடித்த 'மூன்றுமுகம்' படத்தின் ரீமேக்கையும், தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close