'வாட்ஸ் அப்'பில் ஹேப்பி நியூ இயர் டிரெய்லர்!

ஹாரூக் கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் நடித்து ஃபராஹ் கான் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் 'ஹேப்பி நியூ இயர்'.

ரெட் சில்லி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாக உள்ளன. தற்போது படத்தின் டிரெய்லர் எப்போது ரிலீஸ் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் 14 மாலை சுதந்திரதின விடுமுறைக்கு முந்தைய நாளில் படத்தின் டிரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

படத்தின் டிரெய்லரை காண ஆவலோடு எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக ஆண்ட்ராய்டு மொபைல் வசதியான வாட்ஸப் மூலம் டிரெய்லர் வீடியோ அனுப்பப்படும் என அறிவித்துள்ளனர்.

டிரெய்லர் ரிலீஸூக்குப் பிறகு +91 9819020202 இந்த எண்ணுக்கு மிஸ்டு காலோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பினால் அவர்கள் மொபைல் 'வாட்ஸ் அப்'புக்கு படத்தின் டிரெய்லர் அனுப்பி வைக்கப்படும் என படத்தின் புரமோஷனுக்காக நவீன தொழில் நுட்பத்தை நாடியுள்ளனர் படக்குழுவினர். 

 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!