மீண்டும் இணையும் ஷாரூக் - கஜோல் ஜோடி! | shahrukkhan, kajol, rohit shetty, ajay devgan, kareena kapoor

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (20/08/2014)

கடைசி தொடர்பு:12:31 (20/08/2014)

மீண்டும் இணையும் ஷாரூக் - கஜோல் ஜோடி!

பாலிவுட்டின் பிரபல திரை ஜோடி ஷாரூக் கான், கஜோல் இணைந்து  நடித்த 'குச் குச் ஹோதா ஹை', 'தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 'மை நேம் இஸ் கான்' என  அத்தனைப் படங்களும்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் .

தற்போது நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த எவர் க்ரீன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர். அஜய் தேவ்கன், கரீனா நடித்து வெளியான 'சிங்கம் ரிட்டன்ஸ்' பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து வருகிறது.

'சிங்கம் ரிட்டன்ஸ்' படத்தின் வெற்றியால் படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி அடுத்து யாருடன் இணைய உள்ளார் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

பல முன்னணி ஹீரோ, ஹீரோயின்களும் கூட ரோஹித் இயக்கத்தில் இணைய ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், ரோஹித் ஷாரூக்,  கஜோல் ஆகிய இருவரையும் இயக்க உள்ளார்.

படத்தின் கதை, டைட்டில், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த ஆர்வத்தைக் காட்டிலும் ஷாரூக் - கஜோல் படத்தின் ஜோடி என்பதே ஆகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close