மர்தாணி பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகுமா? | mardaani, rani mukarji, yash raj, bollywood

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (23/08/2014)

கடைசி தொடர்பு:12:10 (23/08/2014)

மர்தாணி பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகுமா?

ராணி முகர்ஜி நடிப்பில் 'A'  சான்றிதழுடன் ஆகஸ்ட் 22ல் வெளியான படம் ‘மர்தாணி’ . இதே நாளில் பாகிஸ்தானில் 'மர்தாணி' ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

படத்தைப் பார்த்த பாகிஸ்தான் சென்சார் தரப்பு படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கும் படி கூறியுள்ளனர். மேலும் படத்தில் சில காட்சிகளை மறைக்கும் படியும் கூறவே படக்குழுவினர் மறுத்து விட்டனர்.

                         

'' படத்தில் இத்தகைய மாற்றங்கள் செய்தால் கதை மற்றும் கதை ஓட்டம் பாதிக்கப் படும் . மேலும் படத்தின் கருத்தும் மக்களிடம் சேராது '' என்கிறது படக்குழு.

பாகிஸ்தான்  சென்சார் தரப்பில், படத்தில் மாற்றங்கள் செய்ய வற்புறுத்தினர். அதற்கு தயாராகும் எண்ணத்தில் இல்லாத ‘மர்தாணி’ குழுவினர் பட வெளியீட்டையே நிறுத்தி விட்டனர். பாகிஸ்தானில் ‘மர்தாணி’ ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close