இந்தப் புள்ளை நல்ல புள்ளைதான்! | sunny leone , சன்னி லியோன்

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (10/09/2014)

கடைசி தொடர்பு:12:21 (10/09/2014)

இந்தப் புள்ளை நல்ல புள்ளைதான்!

'சன்னி லியோன் தினம் தினம் புதிய ஹிஸ்ட்ரியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆமாம், இன்டர்நெட்டில் சன்னியின் புகைப்படங்கள், வீடியோக்களை இளைஞர்கள் பார்த்துவிட்டு, 'க்ளியர்  தி பிரௌஸ் ஹிஸ்ட்ரி’ கொடுத்துவிட்டு, அழித்துவிடுகிறார்களே’  இது ஜோக். ஆனால் சன்னி லியோனுக்கு இன்னும் சில ஆச்சர்யமான பக்கங்கள் இருக்கின்றன.

 

 

சன்னி லியோன் 2011ம் ஆண்டு டேனியல் விபெர் என்பவரைத் திருமணம் செய்து இப்போது வரை ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்போடு வாழ்கிறார்கள். 'சன்னி ஆபாசப் படங்களில் நடித்தவர்தான். அதை நான் தொழிலாக மட்டுமே பார்க்கிறேன். எனக்கு கிடைத்த மிகப்பெரும் செல்வமாகவே சன்னியை நான் நினைக்கிறேன்'' என்கிறார் அவரது கணவர்.

சன்னியின் தந்தை, 2010ம் ஆண்டு  கேன்சர் நோயால் மரணமடைந்தார். இதன் காரணமாக 2011ம் ஆண்டு அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடை பெற்ற மாரத்தானில் கலந்துகொண்டு ஓடினார். இந்த மாரத்தான் அமெரிக்க கேன்சர் சொசைட்டிக்குப் பணம் திரட்ட நடைபெற்றது.

நடிப்பு என்று வந்துவிட்டால் சன்னி, சின்சியர் சிகாமணியாம். படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் ’பேக் அப்’ சொல்லும் வரை மொபைல் பயன்படுத்தவே மாட்டாராம். பேக் அப் என்றவுடன் இயக்குநரிடம் வேறு ஏதேனும் வேலை இருக்கிறதா என்று கேட்டுவிட்டுத்தான் செல்போனையே வெளியில் எடுப்பாராம். இதை தற்போது சன்னி நடித்து வரும் 'லீலா’ படத்தின் இயக்குநர் பாபிகான் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

மேலும் சன்னி நாயகி யாக நடித்து வரும் 'லீலா’ வரலாற்றுப் படம் என்ப தால், அரச குமாரிகள் கொடி இடையாளாக இருக்க வேண்டும் என இயக்குநர் கேட்டுக்கொள்ள, ஐந்து கிலோ எடை குறைத்திருக்கிறார்.

எப்பேர்ப்பட்ட ஹீரோயினாக இருந்தாலும் பெடிக்கியூர் எனப்படும் கால் ட்ரீட்மென்ட் செய்தால், உப்புத் தண்ணீரில் கால் வைக்க மாட்டார்கள். காரணம் மிகவும் மென்மையான தோல் என்பதால், காலில் புண் வரக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 'ஜாக்பாட்’ படத்தின்போது முதல் நாள் பெடிக்கியூர் செய்துவிட்டு, அடுத்த நாள் முழுக்க கடல் தண்ணீரில் நடித்தார் சன்னி. 'சன்னிக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். படப்பிடிப்புத் தளத்துக்கு எந்தக் குழந்தை வந்தாலும் நேரம் பார்க்காமல் விளையாடுவார். மேலும் குழந்தையின் தந்தையிடம் குழந் தைக்கு என்ன தேவை என்றாலும் என்னிடம் சொல்லுங்கள் என கூறுவார்’  என நெகிழ்ந்துள்ளார் சன்னியுடன் நடிக்கும் கதாநாயகன் சச்சின் ஜோஷி.

கவர்ச்சி நாயகியாக மட்டுமே தெரிந்த சன்னி ஓர் ஓவியர். அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் வரைவதில் சன்னிக்கு ஆர்வம் அதிகம்.

'செய்யும் தொழிலைத் தொழிலாக மட்டும் பாருங்கள்’ என கூறும் சன்னிக்கு முதல் நண்பர் அவரது கணவர் டேனியல்தான். 'ஆபாசப் படம் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. 100 முதல் 200 பணியாளர்கள் முன்னிலையில் அந்த மாதிரியான படங்களில் நடிப்பது சாதாரண படங்களில் நடிப்பதைக் காட்டிலும் கடினம்’ என்கிறார்.

 

பாரேன், இந்தப் புள்ளைக்குள்ள என்னென் னமோ இருந்திருக்கு!

                                                        ஷாலினி நியூட்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close