வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (22/09/2014)

கடைசி தொடர்பு:13:28 (22/09/2014)

ஃபைண்டிங் ஃபேனி - காதலில் தோற்றவர்களின் கதை !

ந்தியாவின் பார்ட்டி நகரம் என்று கோவாவை அழைப்பதுண்டு. ஆனால், அதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அழகாக படமாக்கி இருக்கிறார்கள். படத்தின் தலைப்பிலேயே படத்தின் கதையை கூறிவிட்டார் இயக்குநர் ஹோமி அடஜானியா. 

கோவாவில் உள்ள ஒரு பழைய தபால் நிலையத்தில் பணிபுரியும் ஃபெட்ரிக் எனும் வயதான தாத்தாவின் இளம் வயது காதலியான ஃபேனியை தேடிச் செல்வது தான் கதை. இந்தப் பயணத்தில் தீபிகா படுகோனே, அர்ஜுன் கபூர் ஆகியோரோடு இரண்டு பேர் இணைந்து பயணிக்கிறார்கள். இறுதியில்,  அந்த தாத்தா தன் காதலியைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதே கதை!

படத்தின்  ஆரம்பத்தில் தீபிகாவும், அர்ஜூன் கபூரும் காதலர்கள் என அறிமுகப்படுத்தும் இயக்குநர் அதே காட்சியிலேயே தீபிகா தன் திருமண அழைப்பிதழை அர்ஜுனிடன் கொடுத்து அதிர்ச்சி ட்விஸ்ட் தருகிறார். அதற்கடுத்து நகரும் காட்சிகளில் திருமணம் ஆன முதல் நாளே திபீகாவின் கணவர் மணக்கோலத்திலேயே இறந்து விட தீபிகா படுகோனே தன் கணவரின் தாயுடன் கோவாவில் வசித்து வருகிறார். அதே ஊரில் உள்ள தபால்காரர் தான் ஃபெட்ரிக். அந்த ஊரில் யாருமே இல்லாத தன் குடும்பத்தின் பழைய  நினைவுகளோடும், காதல் தோல்வியோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ஜுன் என கதை நகர்கிறது.

ஒரு நேரத்தில் அந்த தாத்தா தனியாக வீட்டில் புலம்பிக் கொண்டிருக்க அவர் போஸ்ட் செய்யாமல் விட்ட ஒரு கடிதத்தை தீபிகா படுகோனே  படிக்கிறார். அவருக்கு கடைசி காலத்தில் ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து தன் பழைய காதலனான அர்ஜூனின் உதவியை நாடுகிறார். அர்ஜுனிடம் உள்ள ஓடாத பழைய காரை சரி செய்து பயணத்திற்குக் கிளம்புகின்றனர்.



இதற்கிடையில் தீபிகாவின் மாமியாரை ஒரு ஓவியர்  விரும்புகிறார் . 'மேடம்! வாட் எ வுமன் மேடம்' என்று வசனம் பேசும் காட்சிகள் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.  தீபிகா, தீபிகாவின் மாமியார், தாத்தா, அர்ஜூன், ஓவியர் என ஐந்து பேருடன் பயணிக்கிறது கார்.

ஃபெட்ரிக்கிடம் உள்ள முகவரியைத் தேடிச் செல்கின்றனர். இடையில் இயந்திரக் கோளாறு காரணமாக வண்டி பழுதாகி நிற்கிறது. அந்த வேளையில் தனிமையாகப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அர்ஜுன்,  தீபிகா படுகோனை முத்தமிட கன்னத்தில் ஒரு அறைவிட்டு இது தவறு நான் உனக்கு வெறும் தோழி தான் என கோபப்படுகிறார். பின்னர் இருவருக்கு இடையே நடக்கும் காரசாரமான விவாதத்தின் இறுதியில் இருவர் மனதில் உள்ள காதலால் இருவரும் முத்தமிட்டு இணைகின்றனர்.

 இதே சமயத்தில், பெட்ரோலுக்காக நீண்ட தொலைவு பயணித்திருந்த தாத்தா இவர்களை கஷ்டப்படுத்த விரும்பாமல் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார். அதனைக் கண்டு வருத்தப்படும் அனைவரும் அர்ஜூனை குற்றம் சாட்டுகின்றனர். ஒரு வயதானவரை தவறவிட்டாயே உனக்கெல்லாம் அன்பு பாசம் என்றால் என்ன என்று தெரியாது என்று திட்டி தள்ளுகின்றனர். அர்ஜூன் கோபப்பட்டு தன் பக்கம் உள்ள நியாயங்களைக் கூற, மறுபடியும் ஃபெட்ரிக்கைத் தேடி பயணிக்கின்றனர்.



வரும் வழியில் அர்ஜூனின் பழைய துப்பாக்கி ஒன்று காரின் பழைய திறக்கப்படாத பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட , இதே சமயத்தில் தீபிகா படுகோனின் மாமியாரை அந்த ஓவியர் ஒரு வித்தியாசமான தொனியில் படம் வரைந்து கொடுக்கிறார். அந்த துப்பாக்கியில் இருந்து விளையாட்டாக வெளிவந்த குண்டு ஓவியரைப் பதம் பார்க்க, கண நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓவியர் வண்டியை விட்டு கீழே விழுந்து கடலில் மூழ்கி இறந்து விடுகிறார்.

பரபரப்பான காட்சியில் கார் கட்டுப்பாட்டை இழந்து நிற்கும் இடத்தில் ஃபெட்ரிக் பேருந்திற்காக காத்திருக்க அவரை சேர்த்துக் கொண்டு அவரது காதலியின் வீட்டை அடைகின்றனர். அங்கு 25 வயதுடைய ஒரு பெண்ணிடம் ஓடி சென்று ஃபேனி என்கிறார் தாத்தா. அந்த பெண் நான் ஃபேனியை போன்றே உள்ள ஃபேனியின் மகள் என்றும், இது ஃபேனியின் இறுதி ஊர்வலம் ஃபேனி இறந்துவிட்டார் என்றும் கூறுகிறாள். அதுமட்டுமின்றி ஃபேனி 4 பேரை மணந்து சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் கூறுகிறாள்.

மனமுடைந்த ஃபெட்ரிக் தாத்தாவிற்கு ஆறுதல் எல்லோரும் கூறுகிறார்கள். இறுதியில் கணவனை இழந்த தீபிகாவின் மாமியாருக்கும், 43 வருடங்களாக காதலியை இழந்த  ஃபெட்ரிக்கிற்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான முதல் நாளிலேயே கணவனை இழந்த தீபிகா படுகோனேவுக்கு, தான் காதலிதத அர்ஜூன் கபூரோடு திருமணம் நடக்கிறது.

தீபிகா படுகோனை கவர்ச்சியாகவும், அழகாகவும் காட்டி, பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றத்தில் அர்ஜூன் கபூரைக் காட்டி அழகான கிளாஸிக் படமாக கொடுத்திருக்கிரார் இயக்குநர் ஹோமி. மொத்தத்தில்,  ஃபைண்டிங் ஃபேனி காதலில் தோற்றவர்களின் வாழ்க்கைப் பயணம்!

- ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்