பாலிவுட் மைனா பரிணீதி சோப்ரா! | பரிணீதி சோப்ரா, பிரியங்கா சோப்ரா, மீரா சோப்ரா, நிலா, பாலிவுட் மைனா, தீபிகா படுகோனே

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (23/09/2014)

கடைசி தொடர்பு:11:25 (23/09/2014)

பாலிவுட் மைனா பரிணீதி சோப்ரா!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குளிர்பான விளம்பரம் ஒன்றில் விழிகள் விரிய மாம்பழச்சாறு பருகும் பெண்ணின் முகம் நினைவிருக்கிறதா? அவர்தான் இன்று இந்தியின் மோஸ்ட் வான்ட்டட் யங்  ஹீரோயின். பரிணீதி சோப்ரா.  

குத்துச்சண்டை வீரர் மேரிகோமாக நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் சித்தப்பா மகள்தான் இந்த பரிணீதி சோப்ரா. இவரின் இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரி நடிகை நிலா ( எ) மீரா சோப்ரா. 

பரிணீதி ப்ளஸ்டூ  முடித்துவிட்டு மேற்படிப்புக்காக லண்டன் போனவர். 2009-ல் இவரின் அக்கா பிரியங்கா, பரிணீதியை ஒரு பிரபல சினிமா கம்பெனியில் மார்க்கெட்டிங் பயிற்சியாளாராக சேர்த்துவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் நடிப்பு என்றாலே உவ்வே சொல்லி வந்த பரிணீதிக்கு இந்தியாவில் நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் கிடைக்கும் மரியாதையும் செல்வாக்கும் அதன் மீது ஈர்ப்பை எற்படுத்தியது. பிரபல இந்திப்பட இயக்குநர் மணீஸ் சர்மா பரிணீதி சோப்ராவை படத்தில் நடிக்க அழைத்தார். அக்கா பிரியங்கா இதை அனுமதிக்கவில்லையாம்.

ஒருமுறை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் மாடியில் நடிப்புப் பயிற்சி நடைபெறுவதாகவும் அங்கு வந்து நடித்துக்காட்டவும் சொல்லப்பட்டதாம். உண்மையில் அது செட்-அப். பரிணீதியைக் கடுப்பேற்றி பிரியங்காவிடம் நல்ல பெயர் வாங்க ஒருவர் செய்த வேலை. ஆனால் ஆன்ட்டி கிளைமாக்ஸாக  ஒரு தயாரிப்பாளர் இவருக்கு சினிமா வாய்ப்பை வழங்கிவிட்டார்.  

அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக கிராஃப் ஏறத்தொடங்கி 2013-ல் மட்டும் ஆறு சிறந்த நடிகைக்கான விருதுகளை அள்ளினார். கடந்த வாரம் மைக்ரோசாஃப்ட் இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் நம்பிக்கை அளிக்கும் இளைய நட்சத்திரம் என்று பரிணீதி சோப்ரா தேர்வாகியிருக்கிறார். இரண்டாம் இடத்தில் அலியா பட் தேர்வானார்.

சினிமா கடந்து பொது வெளியில் முற்போக்கான பெண்ணாக இருக்கும் பரிணீதி,  கரண் ஜோஹரின் நிகழ்ச்சியில் பேசும்போது தனக்கு "சைஃப் அலிகான் மேல் ஒரு இது இன்னும் இருக்கிறது, இதை அவரின் மனைவி கரீனா கபூரிடமே தெரிவித்துள்ளேன்" என்றும்  தீபிகா படுகோனே  உடன் டேட்டிங் போக ஆசை என்றும் தெரிவித்து அதிர வைத்தார்!


- செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close