’ஐ’ இந்தி இசை வெளியீட்டு விழாவிற்கு சில்வஸ்டர் ஸ்டோலன் வருகிறாரா? | ஐ, சில்வஸ்டர் ஸ்டோலன், விக்ரம், இந்தி , இசை வெளியீட்டு விழா, ஷங்கர், எமி ஜாக்சன்,பி.சி.ஶ்ரீராம்

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (23/09/2014)

கடைசி தொடர்பு:11:26 (23/09/2014)

’ஐ’ இந்தி இசை வெளியீட்டு விழாவிற்கு சில்வஸ்டர் ஸ்டோலன் வருகிறாரா?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஐ’ . சமீபத்தில் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டு கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'ஐ' படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட்டடித்து வரும் நிலையில் , படத்தின் இந்தி இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.

விக்ரம், ஷங்கர், எமி ஜாக்சன், பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட அனைவரும் இந்தியில் பிரபலம் . இதனால் 'ஐ[ படத்தை நேரடியாக டப்பிங் செய்து வெளியிடுவதால் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனால், இந்தி இசை வெளியீட்டு விழாவிற்கு திட்டம் தீட்டி வருகின்றனர்.தமிழ் இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டு  சிறப்பு விருந்தினராக வந்தது போல் , இந்தி ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவிற்கு ஆக்‌ஷன் ஹாலிவுட் நாயகன் சில்வஸ்டர் ஸ்டோலனை அழைத்து வருவதற்கு ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு வேளை சில்வஸ்டர் ‘ஐ’ இந்தி இசை வெளியீட்டிற்கு வந்தால் பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close