அமிதாப் பாராட்டிய 'யான்' டிரெய்லர்! | அமிதாப் பச்சன், யான், ஜீவா, துளசி நாயர், ரவி.கே.சந்த்ரன்

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (23/09/2014)

கடைசி தொடர்பு:13:26 (23/09/2014)

அமிதாப் பாராட்டிய 'யான்' டிரெய்லர்!

ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா , துளசி நாயர் நடித்திருக்கும்  படம் ‘யான்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்துள்ளன.

அக்டோபரில் படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘யான் ‘ படத்தின் டிரெய்லர் அனைவரிடமும் வரவேற்படைந்தது. தற்போது படத்தின் டிரெய்லரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பார்த்து ‘யான்’ பட டீமைப் பாராட்டியுள்ளார். 

'' ’யான்’ படத்தின் யங் ஆக்‌ஷன் டிரெய்லரைப் பார்த்தேன் என்னை மிகவும் கவர்ந்து விட்டது . படத்தின் வெற்றிக்கு எனது வாழ்த்துகள்.

ரவி.கே.சந்திரன்  மிகவும் திறமையானவர். அவருடன் இணைந்து நான் பணியாற்றிய தருணங்கள் அற்புதமானது. குறிப்பாக ‘பிளாக்’ படத்தின் வெற்றியை என் சினிமா வாழ்வில் மறக்கமுடியாது'' என்கிறார் அமிதாப்.

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்த ‘பிளாக்’ படத்தில் நடித்ததற்காக அமிதாப்புக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close