ஆஸ்கருக்கு செல்லும் இந்திப் படம் !

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கீதாஞ்சலி தபா மற்றும் நவாசுதீன் சித்திக் நடித்து உருவாகியிருக்கும் இந்திப் படம் ’லையர்’ஸ் டைஸ்’ (Liar's Dice). 

வேலைக்காக டெல்லி செல்லும் கணவன் காணாமல் போக , அவரைத் தேடி தன் குழந்தையுடன் செல்லும் ஒரு பழங்குடிப்  பெண்ணின் கதைதான் ‘லையர்’ஸ் டைஸ். இப்படம் ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது.

’லகான்’, ‘மதர் இந்தியா’, மற்றும் ‘சலாம் பாம்பே’ உள்ளிட்ட படங்கள் மட்டுமே ஆஸ்கரில் அந்நிய மொழிப் படங்களில் சிறந்தவை என்ற வரிசையில் முதல் ஐந்து நாமினேஷன்களில் இடம்பிடித்தது. 

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படமும் முழுமையான இந்தியப் படமாக இல்லாமல் அதில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே இந்தியர்கள் என இருந்தது நாம் அறிந்ததே.

தற்போது,  பிப்ரவரி 22, 2015ல் நடக்க உள்ள 87வது ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்திய மொழி சார்பாக ’லையர்’ஸ் டைஸ்’ கலந்து கொள்ள உள்ளது. 

இந்தியாவின் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்தப் படம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!