'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' ரிலீஸ் தள்ளிப்போகிறது !

விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. 'ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை’,'வந்தான் வென்றான்',  ‘சேட்டை’ படங்களை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். படத்திற்கு சென்சார் தரப்பு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்தப் படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி,  சிறையில் அடைபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கங்கள் சனிக்கிழமை மாலை மூடப்பட்டது. ஞாயிறு, திங்கள் கிழமைகளில் படங்கள் திரையிடப்பட்டன.

இன்று தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம் உள்ளனர். இதனால், இன்று ஒரு நாள் முழுக்கக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்ற வாரம் வெளியான படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதால்,  ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ‘ படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறது.

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதே அக்டோபர் 10ல் ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’, மிர்ச்சி செந்தில் , விஜயலட்சுமி நடித்த ‘வெண்நிலா வீடு’ ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!