நான் சவாலை விரும்புகிறேன் - ஹ்ருத்திக் ரோஷன்!

' நான் எப்பொழுதும் சவாலை விரும்புகிறவன். அந்த வகையில் எனக்கு 'Bang Bang ' சரியான படம் என கூறலாம். ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில்  இருக்கிறது.’ என்கிறார் ஹ்ருத்திக் ரோஷன். 

இப்படத்தின் சண்டைக்காட்சிகள் , நான் இதுவரை செய்யாதது. நான் மட்டுமல்ல எந்த ஹீரோவும் செய்ய வில்லை என கூறலாம்.

                   உயரமான மாடியின் மேல்இருந்து விழும் போதும்,சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டும் போதும், F -1 மோட்டார் கார் ஓட்டும் போதும், வாட்டர் ஸ்கையிங் எனப்படும் தண்ணீரில் ஈடுபடும் சாகசத்திலும் சரி, அல்லது ஃப்ளை போர்டு வைத்து செய்த உயிருக்கு உத்திரவாதமில்லாத சண்டை க்காட்சியிலும் சரி எனக்கு உதவிய குழுவினரை மறக்கவே முடியாது .

இப்படத்தில் நான் ஆடிய மைக்கேல் ஜாக்சன் நடனம் இப்போதே மிகவும் பிரபலம்.

'Bang Bang ' டைட்டில் இசை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.அந்த இசைக்கு நான் கதாநாயகி கத்ரீனா கைஃப் உடன் ஆடிய நடனம் கூட பெரிய அளவில் பேசப்படும் .

கத்ரீன மிக திறமையாக நடனம் ஆடக்கூடியவர். அவருடன் ஈடு கொடுத்து ஆடுவது மிகவும் சவாலான ஒன்று.

நானும் கத்ரீனாவும் ராசியான ஜோடி என்று கூறுவது உண்மையாகவே இருந்தாலும், அவர் மிக மிக கடுமையான உழைப்பாளி.தொழில் பக்தி உடையவர்.

 எங்கள் ஜோடிப் பொருத்தம் ’பேங் பேங்’ படத்தின் வெற்றி மூலம் மேலும் மெருகேறும் ' என்கிறார் ஹ்ருத்திக் ரோஷன்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!