கமல், சச்சின் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மோடி அழைப்பு! | மோடி, கமல், சல்மான், சச்சின், ப்ரியங்கா சோப்ரா, அனில் அம்பானி, ராம் தேவ், க்ளீன் இந்தியா,

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (03/10/2014)

கடைசி தொடர்பு:12:26 (03/10/2014)

கமல், சச்சின் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மோடி அழைப்பு!

டெல்லியில் ‘சுத்தமான இந்தியா’ (Clean India) எனும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி. இந்த அமைப்பில் இணைய ஒன்பது பேருக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறினார்.

'' சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற ஒன்பது பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன்.

மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அழைப்பு விடுக்கிறேன்.அவர்கள் மேலும், ஒன்பது பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன்.

சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. இது அமைச்சர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பு மட்டும் இல்லை '' என மோடி தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close