அன்னாபெல் படத்தின் கதை!

ஹாலிவுட் ஹாரர் வரிசையில் அடுத்து களம் இறங்கும் படம் ‘அன்னாபெல்’ . ‘தி கான்ஜூரிங்’ படத்தின் முன் பகுதியாக வெளியாக இருக்கும் இப்படம் ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் வெளியாகி விட்டது.

இந்தியாவில் வருகிற அக்டோபர் 10 ம் தேதி வெளியாக உள்ள ‘அன்னாபெல்’ படத்தின் கதை:

நாற்பத்தேழு வயதான ஜானி ஜோர்டன், நிறை மாதக் கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி மியா ஜோர்டனுக்கு அழகான பொம்மை ஒன்றைப் பரிசளிக்கிறார். வெண்மையான திருமண உடையிலிருக்கும் அந்த பொம்மைக்குப் பின்னால் இருக்கும் பயங்கரம் குறித்தும், அதனால் உண்டாகவிருக்கும் ஆபத்து குறித்தும் இருவருக்கும் அப்போது தெரியவில்லை.

ஒரு நாள் இரவு சாத்தானின் ஆட்கள் அவர்கள் வீட்டில் நுழைந்து ஜோர்டன் தம்பதியருக்கு தொல்லைகள் தர ஆரம்பிக்கின்றனர். தொடர்ந்து பொம்மை பேயின் ஆட்டம் ஆரம்பமாகிறது. ஜோர்டனும் அவர் மனைவியும் சாத்தானின் தாக்குதல்களிலிருந்து மீண்டார்களா என்பதே ‘அன்னாபெல்’ படத்தின் கிளைமாக்ஸ்.

        

 ஜான் ஆர்.லெனட்டி இப்படத்தை இயக்கி உள்ளார். பார்வையாளர்களை இசையால் பயமுறுத்துகிறார் ஜோஸப் பெஷாரா. ஐந்து மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பீட்டர் சஃப்ரோன் மற்றும் ஜேம்ஸ் வானராகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘தி கான்ஜூரிங்’ படத்தை விட அதிக பயமுறுத்தும் காட்சிகளுடன் 'அன்னாபெல்' படத்தை உருவாக்கியுள்ளனர். ‘தி கான்ஜூரிங்’ படம் இந்தியாவில் 50 நாட்களைக் கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!