அயன் மேனுக்கு குட்பை!

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர்மேன் படங்களுக்கு எப்போதுமே உலக அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ‘அயன் மேன்’ படத்துக்கும், அப்படத்தின் ஹீரோ  ராபர்ட் டௌனிக்கும்  ரசிகர்கள் ஏராளம்.

’அயன் மேன்’ இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.  'அயன் மேன் மூன்றாவது பாகம்' ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் வசூல் என்ற வகையில் வழக்கம் போல் கோடிகளைக் குவித்தது.

இந்நிலையில் ’அயன் மேன்’ நான்காவது பாகம் எப்போது என்ற கேள்விக்கு, கண்டிப்பாக 'அயன் மேன்' நான்காவது பாகம் வராது என ஹீரோ ராபர்ட் பதிலளித்துள்ளார்.டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இந்தப் பதிலை அவர் தெரிவித்துள்ளார். ’அவெஞ்சர்ஸ்’ படத்தின் இரு பாகங்களில் அயன் மேனாக நடிக்க ராபர்ட் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த இரு படங்களுக்குப் பிறகு 'அயன் மேன்' உடைக்கு நிரந்தரமாக குட்பை சொல்ல அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அவரது வயதையும் ஒரு காரணமாக சொல்கிறது ஹாலிவுட் தரப்பு.

’அயன் மேன்’ படத்தின் உடையின் கணம், மற்றும் மேக்கப் போட ஆகும் நேரம் என அனைத்தும் ரிஸ்க் உள்ளது. மேலும், திரும்பத் திரும்ப ஒரே பாணியிலான கதையைக் கொடுக்கவும் ராபர்ட் விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!