ஜெயிலில் இருக்கும் சஞ்சய் தத்துக்கு பி.கே சிறப்புக் காட்சி! | p.k.aamir khan, sanjay dutt, anushka sharma, பி.கே.சஞ்சய் தத், அனுஷ்கா ஷர்மா,, அமீர்கான்

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (25/10/2014)

கடைசி தொடர்பு:14:21 (25/10/2014)

ஜெயிலில் இருக்கும் சஞ்சய் தத்துக்கு பி.கே சிறப்புக் காட்சி!

'3 இடியட்ஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அமீர்கானும், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும் மீண்டும் இணைந்துள்ள படம் 'பி.கே'.

அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா ஷர்மா நடித்துள்ளார். முக்கிய ரோலில் சஞ்சய் தத் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது, டிரெய்லருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. டிசம்பர் 19ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் சிறையில் இருப்பதால், அவருக்காக ஸ்பெஷலாக பி. கே படத்தை திரையிட்டுக் காட்ட இருக்கிறார்கள்.

இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், சஞ்சய் தத்திற்கு பி.கே. படத்தைத் திரையிட்டுக் காட்ட சிறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் சஞ்சய் தத்திற்கு ஸ்பெஷலாக பிகே படத்தைத் திரையிடுவோம் என கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close