சன்னி லியோனை நிராகரித்த ஹீரோ!

இந்தி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கூட சன்னி லியோனை ஒரு பாடலிலாவது நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கும் தருவாயில், இம்ரான் ஹாஷ்மி சன்னி லியோனை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

இம்ரான் ஹாஷ்மி அடுத்து நடிக்க இருக்கும் படம் ‘ உங்லி’ .இந்த படத்தின் புரமோஷன் பாடலுக்கு சன்னியை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வந்த நிலையில் படத்தின் ஹீரோ இம்ரான் வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால், பாலிவுட் மட்டுமல்லாமல் சினிமா உலகில் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் இம்ரான் ஹாஷ்மி  என்றாலே ’சீரியல் கிஸ்ஸர்’ என்ற பெயர் பதிந்து விட்டது. அந்த இமேஜை உடைக்க வேண்டும் எனவே தான் சன்னி வேண்டாம் என கூறியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது சன்னி ஆட வேண்டிய பாடலுக்கு வேறு நடிகையை ஆட வைக்கும் பணியில் தீவிரம் காட்டத்துவங்கியுள்ளனர் படக்குழுவினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!