பாலிவுட்டில் கைகோர்க்கும் முருகதாஸ் - அனிருத்! | பாலிவுட்டில் கைகோர்க்கும் முருகதாஸ் - அனிருத்!,பாலிவுட், முருகதாஸ், அனிருத், சோனாக்‌ஷி சின்ஹா

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (29/10/2014)

கடைசி தொடர்பு:11:22 (29/10/2014)

பாலிவுட்டில் கைகோர்க்கும் முருகதாஸ் - அனிருத்!

'கத்தி' படத்தை அடுத்து இந்தியில் படம் இயக்கத் தயாராகி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக உள்ள இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா ஹீரோயினாக நடிக்கிறார்.

சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'மௌனகுரு' தமிழ்ப் படத்தை சில திருத்தங்களுடன் இந்தியில் ரீமேக் செய்கிறார் முருகதாஸ். அருள்நிதி கேரக்டரை அப்படியே ஹீரோயினை மையப்படுத்தியதாக மாற்றி அமைக்கிறார்.

'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக் படமான 'ஹாலிடே' யில் அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்தார். அப்போதே சோனாக்‌ஷியிடம் கால்ஷீட் வாங்கிவிட்டார் முருகதாஸ்.

'லிங்கா' படத்திர்குப் பிறகு சோனாக்‌ஷி சின்ஹா, முருகதாஸ் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கத்தி' படத்தைத் தொடர்ந்து அனிருத், முருகதாஸின் இந்திப் படத்துக்கும் இசையமைக்க உள்ளார். விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close