'பாண்ட் 24' ரிலீஸ் தேதி அறிவிப்பு! | james pond, 007, Daniel Craig, naomi Hariss, sky fall , ஸ்கை ஃபால், டேனியல் க்ரேக், ஜேம்ஸ் பாண்ட்,

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (03/11/2014)

கடைசி தொடர்பு:15:12 (03/11/2014)

'பாண்ட் 24' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஸ்கைஃபால்’ படத்திற்கு பிறகு அடுத்த 007 படம் எப்போது என்ற கேள்வி ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகின் பல ரசிகர்களிடமும் எழத் துவங்கியுள்ளது. பெயர் இன்னும் வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முந்தைய பாகங்களின் நாயகன் டேனியல் கிரேக் இந்த படத்திலும் ‘ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார். நவோமி ஹாரிஸ் நாயகியாக நடிக்கிறார். ‘ஸ்கைஃபால்’ படத்தின் இயக்குநர் சாம் மெண்டிஸ் இயக்குகிறார்.

‘ஸ்கைஃபால்’ படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜான் லோகன், நீல் பர்விஸ், மற்றும் ராபர்ட் பர்விஸ் ஆகியோர் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதுகிறார்கள். படத்தின் டீஸர் என யூ டியூப்பில் வெளியான டீஸர் அதிகாரப்பூர்வ டீஸர் அல்ல என சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டேனியல் தெரிவித்துள்ளார்.

'' ’பாண்ட் 24’ படத்தின் படப்பிடிப்புகள் முதற்கட்டத்தில் உள்ளது எனவும் மேலும் ‘பாண்ட் 24’ மற்றும் 25 இரண்டும் அடுத்தடுத்து வர இருக்கிறது.

இதில் ‘பாண்ட் 24’ அமெரிக்க நாடுகளில் அக்டோபர் 24, 2015ம் தேதியும் , உலக அளவில் நவம்பர் 6, 2015ம் தேதியும் வெளியாகும். 

அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டீஸரை இந்த வருட இறுதிக்குள் எதிர்பார்க்கலாம் '' என டேனியல் கிரேக் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close