தீவை வாங்கிய ஹீரோயின்!

பாலிவுட்டில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். ‘மர்டர்-2’ படத்தில் ஹாட் நாயகியாக நடித்தவர்,  சல்மான்கானுடன் ‘கிக்’ படத்தில் ஆரம்பித்து ’டெஃபனிஷன் ஆஃப் ஃபியர்’ மற்றும் ’அக்கார்டிங் டு மேத்யூ’ என ஹாலிவுட் படங்கள் வரை சென்றுவிட்டார்.

சமீபத்தில் சல்மான் ஜாக்குலினுக்கு வீடு வாங்கி கொடுத்தார் என கிசுகிசுக்கள் பரவ அதற்கு பதில் அளித்துள்ளார் ஜாக்குலின்.

'' சல்மான்கான் மும்பையில் எனக்குப் பங்களா வாங்கி கொடுத்ததாக சொல்கிறார்கள். அவர் வாங்கிக் கொடுக்கவில்லை. வாங்கிக் கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக் கொள்வேன்.

 மும்பையில் வீடு வாங்குவது தொடர்பாக சில ஆலோசனைகளை அவரிடம் கேட்டேன். அவ்வளவுதான் அதற்கு கண் காது மூக்கு வைத்து பரப்பி விட்டார்கள். ஆனால் விரைவில் வீடு வாங்குவேன்.

எனது பூர்வீகம் இலங்கை. அங்கு ஒரு இடம் வாங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஒரு சிறிய தீவு நல்ல விலைக்கு வந்ததும் வாங்கி விட்டேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்கு சென்று விடுவேன்.

அமைதியும், சந்தோஷமும் அங்கு கிடைக்கும். என்னுடைய காதலர் சாஜித்திடமிருந்து பிரிந்து விட்டது உண்மைதான். அவரை மறக்க முடியாமல் தவிக்கிறேன் என்பதும் உண்மைதான்.

நான் உண்மையான அன்பு வைத்திருந்ததை போல அவர் என் மீது உண்மையான அன்பு வைத்திருக்கவில்லை. விரைவில் மறந்து விடுவேன்'' எனவும் கூறியுள்ளார் ஜாக்குலின்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!