அசாருதீன் வாழ்க்கை இந்தியில் படமாகிறது!

சமீபகாலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் என ஆரம்பித்து இந்த லிஸ்ட்டில் கபில் தேவின் வரலாறும் படமாக உள்ளதாக தகவல்கள் வெளியாக அடுத்து இந்த லிஸ்ட்டில் இப்போது புதிதாக இணைந்திருப்பவர் அசாருதீன்.

இந்திய கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தக்க கேப்டன்களில் முகமது அசாருதீனும் ஒருவர். தற்போது இவரது வாழ்க்கை வரலாறும் இந்தியில் படமாக உருவாக உள்ளது.

இதில் முக்கிய அம்சமாக 2000ல் நடந்த மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டால் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகிய விஷயங்களும் அடக்கம்.

பின்னர் அரசியலில் இணைந்து எம்.பி.ஆனது வரை படத்தில் பதிவு செய்யப் போகிறார்களாம்.இப்படத்தை இயக்க உள்ள ஆண்டனி டிசோசா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாலாஜி மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனுஷ் கார்க்கும் உறுதி செய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!