உலகின் நீளமான சினிமாவின் மற்றொரு டீஸர்!

720 மணி நேரங்கள் ஓடக்கூடிய உலகின் நீளமான சினிமாவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆண்டர்ஸ் வெபெர்க். அதாவது, தொடர்ச்சியாக 30 நாட்கள் ஓடக்கூடிய இதை சாதனை முயற்சியாக மட்டுமில்லாமல், தன்னுடைய கனவுப் படமாகவும்  உருவாக்கிக்கொண்டிருக்கும் ஆண்டர்ஸ், இதுவரை 72 நிமிடங்கள் ஓடக்கூடிய இரண்டு டீஸர்களை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில படத்தின் மூன்றாவது டீஸர் நவம்பர் 12-ம் தேதி வெளியாகவிருக்கிறது!

தவிர, படத்தைப் பற்றி இதுவரை பகிர்ந்துகொள்ளாத அனைத்து விஷயங்களையும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள போன் மர்சே ஸ்டுடியோவில் நடக்கவிருக்கும் 'டீஸர் வெளியீட்டு விழா'வில் விரிவான கலந்துரையாடலாக நடத்தி பகிர்ந்துகொள்ளவிருக்கிறாராம் ஆண்டர்ஸ். இப்போதைக்கு 'ஆம்பியன்ஸ்' படத்தின் மூன்றாவது டீஸருக்கு 12 நொடிகள் ஒடக்கூடிய அறிமுக வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
 
 2020-ல் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் 7 மணி 20 நிமிடங்கள் ஓடும் டிரெய்லர் 2016-ம் ஆண்டிலும்  72மணி நேரம் ஓடக்கூடிய படத்தின் முழுநீள டிரெய்லர் 2018-ம் ஆண்டிலும் வெளியிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!