மூடி மறைப்பதில் உடன்பாடில்லை!

பார்சிலோனாவில் ஒரு சினிமா ஷூட்டிங்கில் இருக்கும் பிரபலமான நடிகைக்கு போன் வருகிறது. எதிர்முனையில் நடிகையின் தங்கை. (தாய் வழி உறவு. அதாவது, கசின்!)

‘‘அக்கா! முதல் படத்துலயே நியூடா நடிக்கக் கூப்பிடுறாங்க! என்ன செய்ய?’’

‘‘நிர்வாணம் என்பது ஒரு கலை. தவறு, பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது! உன் மனதுக்குப் பட்டதைச் செய்!’’

அக்கா கொடுத்த தைரியத்தில் இப்போது அறிமுகமாகும் ‘ஜித்’ என்னும் பாலிவுட் படத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்புக்குத் தீனி போட்டிருக்கிறார் நடிகை பார்பி ஹண்டா. பார்சிலோனாவில் தங்கைக்குத் தைரியமூட்டியவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் ‘தமிழன்’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்தாரே... அவரேதான்!

ஏற்கெனவே ப்ரியங்கா சோப்ராவின் தங்கைகள் - ப்ரினிதி சோப்ரா, மீரா சோப்ரா இருவரும் பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கையில், பார்பிக்கும் இப்போது ஹீரோயின் ஆசை பற்றிக் கொள்ள, நினைத்தபடி முதல் படத்திலேயே செம பாப்புலராகி விட்டார்.

பிரபல தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா தயாரிக்கும், விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் நவம்பர் 28-ம் தேதி வெளிவர இருக்கிறது ஜித் படம். ஆனால், இப்போதே ‘ஜித்’ படத்தின் அன்சென்ஸார்டு டிரெய்லர், யூ-டியூப்பில் செம வைரலாகப் பரவிக் கொண்டிருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் பார்பி. ‘‘இது (2014) கலி உலகம். இப்போதுள்ள கலாசாரத்தில் மூடி மறைத்து முக்காடு போடுவதில் எனக்கு இஷ்டமில்லை!’’ என்று செம தடாலடியாக பேட்டியும் கொடுத்துவிட்ட பார்பி, இப்போது கிறிஸ்துவராக மதம் மாறியிருக்கிறார். பார்பியின் புதிய பெயர் - மனாரா.

மனாரா என்றால் கிரேக்க மொழியில், மின்னுதல் என்று அர்த்தமாம்!

வாம்மா மின்னல்!

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!