இனி வில்லன் சப்ஜெக்டுதான் ஓடும்! | நைட்க்ராலர், ஜாக் ஜில்லென்ஹால், ஹாலிவுட், nightcrawler, jake gyllenhall

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (17/11/2014)

கடைசி தொடர்பு:11:20 (17/11/2014)

இனி வில்லன் சப்ஜெக்டுதான் ஓடும்!

'இண்டர்ஸ்டெல்லர்’ என்ற மிக பிரம்மாண்ட படத்துடன் போட்டியாக இறங்கியிருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘நைட்க்ராலர்’ . ஜாக் கில்லென்ஹால், ரின் ரூஸொ , நடிப்பில் அறிமுக இயக்குநர் டான் கில்ராய் இயக்கியிருக்கும் க்ரைம், த்ரில்லர் ‘ஆன்டி -ஹீரோ’ படம் .

பணத்திற்காக ரோட்டோர இரும்பு வேலிகள், தடுப்புகளை திருடி விற்பவர் ஹீரோ ஜாக். ஒரு நாள் ஒரு கேமரா குழு ரோட்டோர விபத்து ஒன்றை படம் பிடித்து லோக்கல் சேனலிடம் விலை பேசுவதை காண்கிறார். அதிலிருந்து அப்படியே ஒரு ஐடியா கிடைக்க அடுத்த நாள் ரேடியோ கன்வெட்டரை ஒரு போலிசீடம் ஆட்டைய போட்டு அடுத்தடுத்து ஊரில் நடக்கும் க்ரைம், விபத்து, என அனைத்தையும் தெரிந்து கொண்டு உடனடியாக ஸ்பாட்டிற்கு சென்று ஒரு ஹேண்டி கேமராவில் ஷூட் செய்து லோக்கல் நியூஸ் சேனலிடம் கொண்டு செல்கிறார் ஹீரோ. அங்கே காலைநேர நியூஸ் ப்ரொடியூஸராக பணி புரியும் ரின் ரூஸோவிடம் (நடுத்தர வயது பெண்) போட்டு காட்ட முதல் செய்தியிலேயே பாராட்டுகளை பெற்றதுடன் மேலும் 1000 டாலர் கேட்க அவரோ இது நல்ல செய்தியாயிற்றே நான் 2500 டாலர்கள் தரலாம் என இருந்தேன் எனக் கூற ஹீரோவிற்கு தலை கால் புரியவில்லை.அவ்வளவுதான் செய்தி சேஸிங் நடக்கிறது. கிடைக்கும் க்ரைம் செய்திகள், விபத்து என அனைத்தையும் எடுப்பதோடு க்ரைம் சீன்களையும் தனக்கேற்றார் போல் மாற்றுகிறார். உதராணத்திற்கு டெட் பாடி இருட்டில் இருந்தால் அதை வெளிச்சத்திற்கு இழுத்து வந்து ஷூட் செய்வது என இப்படி பண மோகம் அதிகரிக்கிறது ஜாக்கிடம். இடையில் தான் ஒருவனால் இதை செய்ய முடியாத நிலை உருவாக இண்டர்ன்ஷிப் என்ற பெயரில் ஒரு இளைஞனை நியமிக்க அவன் மொபைல் மேப் மூலம் வழி காட்ட இன்னும் வேகமாக 'அந்த' வேலையில் ஈடுபடுகிறார் ஹீரோ. இந்நிலையில்தான் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடக்க போலிஸ் வருவதற்கு முன்பே அங்கு செல்லும் ஹீரோவும் அவரது உதவியாளரும் , யாருக்கும் கிடைக்காத வகையில் டெட்பாடி , துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் என அனைத்தையும் கேமராவில் பதிந்து சேனல் ப்ரொடியூசரிடம் கொடுத்து விட்டு டீல் பேச ஆரம்பிக்கிறார் ஜாக். 15,000 டாலர்கள் வேண்டும் மேலும் சுய விளம்பரமாக ’வீடியோ நியூஸ் ப்ரொடக்ஷன்’ பெயரை நேரலையில் கூற வேண்டும் என சொல்ல அதற்கு மறுக்கிறார் ரின்.

  

இல்லையென்றால் வேறு சேனல் ரெடியாக உள்ளது என திமிராக கிளம்ப அதற்கு வேறு வழியின்றி சம்மதிக்கிறார் ரின்.இதற்கு இடையில் ரின்னையும் டேட்டிங்கிற்கு கூப்பிட உன் வயது என்ன என் வயது என்ன என கூறிவிட்டு செல்கிறார் ரின். இந்த வழக்கை விசாரிக்கும் டிடெக்டிவ் அடுத்து ஜாக்கைத் தோண்ட ஆரம்பிக்கின்றனர். ஆனால் எல்லாவற்றிற்கும் தைரியமாக பதில் சொல்லும் ஹீரோவிற்கு அடுத்து ஒரு ஐடியா உதயமாகிறது. நாம் ஏன் க்ரைம் சீனை உருவாக்கக் கூடாது என!
தனது கேமராவில் பதிந்த குற்றவாளிகளைத் தேடி செல்லும் ஜாக் குற்றவாளிகளை பின் தொடர்வதோடு அவர்கள் சரியான இடத்திற்கு வந்தவுடன் போலீஸுக்குத் தகவல் கொடுக்கிறார். குற்றவாளிகளை போலீஸ் சுற்றி வளைப்பதற்குள் குற்றவாளிகள் துப்பக்கியால் ஒரு போலீஸை சுட்டு விட்டு தப்பிக்கிறார்கள். குற்றவாளிகளில் ஒருவனை போலீஸ் சுட்டுவிடுகிறது. எனினும் அவன் தப்பித்து விடுகிறான். அந்த சேஸிங்கைப் பின் தொடர்ந்து கேமராவில் படம் பிடிக்கும் ஜாக். ஒரு கட்டத்தில் போலீஸ் வேன் மற்றும் குற்றவாளி ஓட்டிச் சென்ற கார்  விபத்தாகி குப்புற விழுகிறது. அதை அருகில் இருந்து படம் பிடிக்க நினைக்கும் ஹீரோ, கார் அருகே சென்றுவிட்டு மேலும் குற்றவாளி இறந்து விட்டதாக கூறி தனது உதவியாளனை படம் பிடிக்கும் படி அழைக்கிறார். அருகில் சென்றவுடன் உதவியாளனை குற்றவாளி சுட கீழே விழுகிறார் 'இண்டர்ன்ஷிப்' உதவியாளன். அதற்குள் போலீஸ் வர ஜாக் நடந்தவை அனைத்தையும் படம் பிடித்து கொண்டு 50,000 டாலர்கள் டீல் என சேனல் வசம் கொடுப்பதோடு ஜாக்கின் புத்தி சாதுர்யத்தை கண்டு ஜாக்கிடம் ரின்  மயங்க பிறகு என்ன முத்த மழைதான்.


அடுத்த காட்சியில் விசாரிக்க ஆதாரம் இல்லாமல் சர்வ சாதரணமாக வெளியே வரும் ஜாக் மூன்று வேன் , மூன்று இண்டர்ன்ஷிப் உதவியாளர்கள் என தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதோடு எண்ட் கார்ட் போடுகிறார்கள்.

மின்னல் வேகத்தில் பறக்கும் சேஸிங், போலீஸ் வருவதற்குள் ஸ்பாட்டை அடையும் ஹீரோவின் சாதுர்யம், அப்பாவியான தோற்றம், க்ரைம் சீனையே மாற்றும் தருணம் என அனைத்தும் திக் திக் திக் தான் என்றாலும் சாதாரண சிம் தொலைந்தாலே அதை ப்ளாக் செய்வது ஈஸியான நிலையில் போலீஸின் ரிஸீவர் லீக் ஆவதை எப்படிக் கண்காணிக்காமல் இருக்கிறார்கள் எனக் கேள்வி எழுகிறது. மேலும் அவ்வளவு ஒரு சேஸிங் துப்பாக்கி சூடு நடந்து முடிந்த இடத்தில் சாவகாசமாக உயிருக்குப் போராடும் உதவியாளனிடம் ஹீரோ வசனம் பேசுவது சற்றே நெருடல் தான்.

வேலை இல்லையென்றால் வேலையை உருவாக்கு என்பது பழைய ஸ்டைல் வேலை இல்லையா முதலாளியாக மாறு என புது ஃபார்முலா சொல்கிறார் இந்த 'நைட் க்ராலர்’.

-ஷாலினி நியூட்டன் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close