கத்தி ரீமேக்கில் சல்மான் கான் ? | சல்மான் கான், ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி, விஜய், சமந்தா, கோவிந்தா, அனிருத், kaththi, a.r.murugadoss, salmankhan , vijay, samantha, govindha, anirudh,

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (18/11/2014)

கடைசி தொடர்பு:13:43 (18/11/2014)

கத்தி ரீமேக்கில் சல்மான் கான் ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் , சமந்தா நடித்து தீபாவளி சிறப்பாக வெளியான படம் ‘கத்தி’. அனிருத் இசையில் பாடல்கள் முதல் டிரெய்லர், படம் என கோலிவுட்டின் டாப் செய்திகளில் வந்த ‘கத்தி’ படம் வெளியான பிறகும் 12 நாட்களில் 100 கோடிகளை வசூலித்தது.

விரைவில் தெலுங்கில் ’கத்தி’ டப்பிங் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இந்தி உரிமையை ஏ.ஆர்.முருகதாஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும், இப்படத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் சல்மான் கானிடமும்,  கோவிந்தாவுடனும் பேச்சு வார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் சல்மான் கான் , மற்றும் கோவிந்தாவுடன் பேசும் புகைப்படம் ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close