பிகினியில் கார் வாஷ் செய்யலாம்! சன்னி லியோன் ஐடியா!

மகா ஜனங்களே... இது ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கான விஷயம் என்றால் நம்பவா போகிறீர்கள்? நம்புங்கள்... நம்பாமல் இருங்கள்... விஷயம் இதுதான்!

கார் வைத்திருக்கும் பலர், ‘அடிக்கடி என் கார்ல பிரச்னை வருது... என்னன்னே தெரியலை’ என்று புலம்புவதைக் கேட்டிருப்போம். அவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - காரைச் சுத்தமாக வைத்திருந்தாலே பாதிப் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். எனவே, அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒருமுறையாவது உங்கள் காரைக் கழுவுவது நல்லது. இந்த வேலையைத்தான் சன்னி லியோன், ஒரு பாலிவுட் படத்தில், பிகினி உடையில் செய்கிறார். ‘மஸ்தி சாதே’ என்னும் இந்திப் படத்தில், ஒரு காட்சியில் காரைக் கழுவுவது போல் ஒரு காட்சி; இயக்குநர் 'டேக்' சொல்ல, 'நோ...இதை இப்படிப் பண்ணா நல்லா ரீச் ஆகும்!’ என்று இயக்குநருக்கே ஐடியா கொடுத்து, இந்த பிகினி வாஷ் சீனைச் சொல்லி அப்ளாஷ் வாங்கி இருக்கிறாராம் சன்னி.ஹாலிவுட்டில் ‘பேட் டீச்சர்’ என்று ஒரு படம். பிரபல டாப்லெஸ் நடிகை கேமரூன் டயஸ் நடித்தது. அந்தப் படத்தில் இப்படி ஒரு காட்சி, ரசிகர்கள் மத்தியில் அப்ளாஸ் அள்ளியது. இதை இன்ஸ்பிரேஷனாக வைத்துத்தான் ஐடியா கொடுத்தாராம் சன்னி. இதனால், பாலிவுட் பக்கம் ‘சன்னி லியோன் ஒரு ப்ரில்லியன்ட் கேர்ள்... எல்லாம் தெரிந்தவர்’ என்று இயக்குநர் மிலப் ஜவேரி சன்னியைப் பாராட்டித் தள்ளுகிறாராம். தாய்லாந்தில் உள்ள பட்டாயா தீவில் கவர்ச்சிகரமாக காரைக் கழுவி ரசிகர்களைச் சூடேற்ற வருகிறார் சன்னி. (ஒரு நல்ல பின் குறிப்பு: சன்னி லியோனுக்கு இந்தப் படத்தில் இரட்டை வேடம்!)

எப்படியோ நமக்கு கார் சுத்தமானா சரிதான்!

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!