தமிழக மீனவர்கள் விடுதலைக்கு உதவினாரா சல்மான் கான்? | சல்மான்கான், மீனவர்கள் பிரச்னை, அர்பிதா கான், சல்மான் தங்கை திருமணம், ராஜபக்‌ஷே,

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (24/11/2014)

கடைசி தொடர்பு:16:18 (24/11/2014)

தமிழக மீனவர்கள் விடுதலைக்கு உதவினாரா சல்மான் கான்?

சமீபத்தில் சல்மான் கான்  தனது தங்கை அர்பிதா கானின் திருமண விழாவை திருவிழா போன்று மும்பையில் நடத்தினார். இந்த விழாவிற்கு ராஜபக்‌சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஐந்து மீனவர்கள் விடுதலைக்கு நடிகர் சல்மான் கானும் மறைமுகமாக உதவியதாக கூறப்படுகிறது.

தங்கையின் திருமண அழைப்பிதழை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கொழும்பில் உள்ள தனது நண்பரும் பத்திரிகையாளருமான ரஜத் சர்மா மூலம் கொடுத்து அனுப்பியுள்ளார் சல்மான் கான்.

ரஜத் சர்மா, ராஜபக்சேவை நேரில் சந்தித்து அர்பிதா கானின் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். அப்போது  பத்திரிகையாளர் என்ற முறையில் ஐந்து  தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனை பிரச்னையை எடுத்துக்கூறி அவர்களை விடுதலை செய்ய கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்று பல வழிகளில் இருந்தும் நட்பு வட்டாரங்களில் இருந்தும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வந்ததால் ராஜபக்சே அவர்களை விடுதலை செய்ய முன் வந்தார் என்றும் கூறப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close