பிரபலங்களிடம் பெருகி வரும் க்ளீன் இந்தியா ஆர்வம்!

பிரதமர் மோடி அறிவித்த  ’க்ளீன் இந்தியா’ திட்டத்தை பல பிரபலங்கள் ஆர்வமாக செய்து வருகின்றனர்.கமல், சல்மான் கான், சச்சின், அம்பானி, அமீர் கான் , மோகன்பாபு, நாகார்ஜூனா குடும்பம் என ஆரம்பித்து தமன்னா, சமந்தா வரை இந்த க்ளீன் இந்தியாவில் சாலைகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்தனர். 

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன், அமிதாப் பச்சன், மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய மூவரும் க்ளீன் இந்தியா பணியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

பிரியங்கா சோப்ரா சற்றும் யோசிக்காமல் தேங்கியிருந்த அழுக்கு நீரில் கூட இறங்கி சுத்தம் செய்து பார்ப்பவர்களை சற்றே ஆச்சர்யப்பட வைத்துள்ளார். 

அமிதாப் பச்சன் உடல்நிலை சரியில்லாமல் சில மாதங்களுக்கு முன்புதான் சிகிச்சை பெற்றார். தற்போது க்ளீன் இந்தியா பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இதனால், அமிதாப்புக்கு ரசிகர்களின் வாழ்த்துகளும் , பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!