இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் - ஷாரூக் புகழாரம்!

இந்தியா டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான ‘ஆப் கி அடலட்’ 21 வருடங்களைக் கடந்து அடுத்த தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன் வெற்றிக் கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் பிரபல முகங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் முதல் முறையாக பாலிவுட் சினிமாவை ஆளும் சல்மான் கான், ஷாரூக் கான், மற்றும் அமீர் கான் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.

மூவரும் ஒரேமேடையில் ஏறி ஒருவருக்கொருவர் தங்களது நட்பை வெளிப்படுத்த அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. 

இதில் ஷாரூக் கான் தானும் இந்திய சினிமாவின் ஒரு பெரிய நடிகர் என்பதைத் தாண்டி சல்மானை ‘இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்’ என அழைக்க பிரம்மிப்பும், ஆச்சர்யமும் ஒன்று சேர இந்த மூன்று கான்கள் இணைந்த புகைப்படங்கள் இணையத்தில் ஹிட்டடித்தன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!