இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! | பிகே, அமீர்கான், அனுஷ்கா ஷர்மா,

வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (09/12/2014)

கடைசி தொடர்பு:15:26 (09/12/2014)

இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்!

இந்தியாவின் முக்கிய சினிமா பிரபலங்களில் அமீர் கானும் ஒருவர். இந்திய சினிமாவின் முப்பெரும் கான்களின் ஒருவரான அமீரின் ‘பிகே’ படம் டிசம்பர் 12ம் தேதி ‘லிங்கா’ வெளியாக உள்ள அதே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 19ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமீர் கான் , அனுஷ்கா ஷர்மா, நடித்திருக்கும் இப்படத்தின் புரமோஷன்களில் பிஸியாக இருக்கும் அமீர் கானிடம் அடுத்த படம் குறித்து கேள்வி வைக்கப்பட்டது. 

அதற்குப் பதில் அளித்த அமீர்கான்: '' ‘பிகே’ படத்திற்குப் பிறகு எந்த கதையிலும் நான் ஒப்பந்தமாகவில்லை. ‘என் வாழ்வில் நான் நடித்த மிக முக்கியப் பாத்திரங்களில் ‘பிகே’ படத்தின் பாத்திரமும் ஒன்று. 

இப்படத்தை முழுமனதோடு வெளியிட்ட பிறகே அடுத்த வேலைகள் பற்றி யோசிப்பேன். மேலும் ’சத்யமேவ ஜெயதே’ விழிப்பு உணர்வுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் முடியும் தருவாயை நெருங்கியுள்ளது. 

மிக வித்தியாசமான பாத்திரங்களிலேயே நடித்துவந்த நான் மீண்டும் சாதாரண ஒரு ரோலில் நடிக்க விரும்புகிறேன் . அதற்காக இப்போதுதான் கதை கேட்டு வருகிறேன் . கதை ஓ.கே ஆகும் தருவாயில் படம் 2016ல் வெளியிடும் எண்ணம் உள்ளது '' என்கிறார் அமீர் கான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close