ஒபாமாவின் காதல் வாழ்க்கை படமாகிறது!

உலகின் முக்கிய காதல் தம்பதியர்களில் சிறந்த காதலர்களாக ஒபாமா மற்றும் மிச்செல் குறிப்பிடத்தக்கவர்கள். 

இவர்களின் காதல் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாக உருவாக உள்ளது. ’சௌத் சைட் வித் யூ’ என்ற பெயரில் உருவாக உள்ள இந்தப் படத்தை இயக்க இருக்கிறார் ரிச்சர்ட் டானெ.

1989ம் ஆண்டு மிச்செல் மீது ஒபாமாவிற்கு ஏற்பட்ட காதல் துவங்கி , முதல் முத்தம் ,முதல் அன்பளிப்பு என 1992ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது வரை இப்படத்தில் இடம்பெற உள்ளதாம்.

ஒபாமா பாத்திரத்தில் நடிக்க ஹீரோ தேர்வு நடந்து வருகிறது. மிச்செல் பாத்திரத்தில் நடிக்க டிக்கா சம்ப்டர் என்ற பிரபல நடிகை தேர்வு செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்புகள் 2015 மத்தியில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!