செக்ஸியான ஆணாக ஹ்ரித்திக் ரோஷன் தேர்வு!

பாலிவுட்டின் ட்ரீம் பாய் என அனைவராலும் செல்லமாக வர்ணிக்கப்படுபவர் ஹ்ரித்திக் ரோஷன். நடனம் , சிக்ஸ் பேக் என பல காரணங்களால் ஹ்ரித்திக் ரோஷனை  அதிகம் பேர் ரசிக்கின்றனர்.

இப்போது ஆசியாவின் செக்ஸியான ஆண் என ஹ்ரித்திக் ரோஷனைத் தேர்வு செய்துள்ளனர். 

பிரபல இங்கிலாந்து வார இதழான ஈஸ்டர்ன் ஐ, சர்வதேச அளவில் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹ்ரித்திக் ரோஷன், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஷாகித் கபூர் உள்ளிட்ட பல இந்திய முகங்கள் இணைந்த 50 பேரின் பெயர்கள் இதில் இடம்பெற்றன.

இதற்கு நன்றி தெரிவித்த ஹ்ரித்திக், எனக்கு இந்த ஆங்கீகாரம் ஆச்சர்யமாக இருக்கிறது. '' செக்ஸி என்ற தேர்வு உடல் அமைப்பில் மட்டும் அல்லாமல். மனதளவிலும் முறையாக இருந்தால் மட்டுமே கிடைக்கும் '' என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!