பிரபலங்கள் பாராட்டும் அமீர் கானின் பிகே! | பிகே, தனுஷ், சமந்தா, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ், அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி,அனுஷ்கா ஷர்மா, pk, dhanush, samantha, sivakrthikeyan, amirkhaan, rajkumar hirani,

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (20/12/2014)

கடைசி தொடர்பு:14:48 (20/12/2014)

பிரபலங்கள் பாராட்டும் அமீர் கானின் பிகே!

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான், அனுஷ்கா ஷர்மா , சுஷாந்த் சிங் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பிகே’. 

படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. மேலும். அமீர் கானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தைப் பார்த்த தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். 

தனுஷ் தனது ட்விட்டரில் ‘ராஜ்குமார் ஹிரானி சாருடைய பிகே மாஸ்டர் பீஸ் . எனது உணர்வுகளை வெளிப்படுத்த என்னால் போதுமான வார்த்தைகள் தேட முடியவில்லை . 5க்கு 100 ஸ்டார்கள்’ என ட்விட் செய்துள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் , '' 'பிகே' பார்த்தேன்! அமீர் கானிடமிருந்து அற்புதமான நடிப்பு.  ராஜ்குமார் ஹிரானியிடமிருந்து அபாரமான வொர்க் ;; என ட்விட் செய்துள்ளார். 

சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘' 'பிகே' எனது மனம் நிறைவாக இருக்கிறது. ஹிரானியின் அற்புதமான படைப்பு. மற்றும் அமீர் கான் கடவுளின் சிறப்பான உருவாக்கம். மிகவும் திறமைசாலி '' என ட்விட் செய்துள்ளார். 

சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் . '' 'பிகே' படத்தை நான் நேசிக்கிறேன். ஹிரானி மற்றும் அமீர் கானுக்கு எனது நன்றி ''  என ட்வீட் செய்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close