ஹீரோ தனுஷ், வில்லன் அமிதாப் - ' ஷமிதாப் ' ரகசியம்!

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், மற்றும் அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் படம் ‘ஷமிதாப்’. படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் என அமிதாப் மற்றும் தனுஷ் இணைந்து நிற்கும்படி இருக்க அதுவே சினிமே உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில் சமீபத்தில் ‘ஷமிதாப்’ படத்தின் போஸ்டரில் DhanuSHAMITABHBachchan என தலைப்பை தனுஷ் மற்றும் அமிதாப்புடன் இணைத்து வெளியிட்டுள்ளனர்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள தனுஷ் எனக்கு பெருமையான தருணம் என ட்விட் செய்துள்ளார்.

 

இதனையடுத்து வெளியான இரண்டாவது போஸ்டர், மற்றும் அமிதாப்பின் குரலில் அமைந்த டீஸர் என அனைத்திலும் இருவரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நடிகன், மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் இருவருக்கும் இடையிலான நட்பு மற்றும் அதன் பிறகு ஏற்படும் ஈகோ பிரச்னை என படம் நடிகர் மோகன், மற்றும் பிரபல டப்பிங் ஆர்டிஸ் எஸ்.என்.சுரேந்தர் இருவரின் கதையை அடித்தளமாக கொண்டு வெளியாக உள்ளதாம்.

இதில் ஹீரோவாக தனுஷும், வில்லனாக அமிதாப்பும் நடிக்க உள்ளார்கள் என்பது தான் ஆச்சர்யமான தகவல்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!