என்னால் மறக்க முடியாத தருணம் - கே.பி குறித்து அமீர்கான்!

கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ’தூம் 3’  படத்தின் புரோமஷனுக்காக தமிழகம் வந்த அமீர்கான் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரை சந்தித்தார்.

அதை நினைவு கூர்ந்து தன்னால் மறக்க முடியாத தருணம் அவரை சந்தித்தது எனவும் மேலும் கே.பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் அமீர் கான்.

அவர் ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, கே.பாலச்சந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பு.

 

சினிமா துறைக்கு அவர் ஆற்றியுள்ள சேவை மகத்தானது. என்னிடம் அவர் காட்டிய பெருந்தன்மையும், அரவணைப்பும் என்றும் என் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

மிகுந்த பணிவு கொண்ட பெரியவர் அவர். என்னுடைய 25 வருட சினிமா வாழ்வில் அவருடன் கலந்துரையாடிய மாலை நேரத்தை என்றும் என்னால் மறக்க இயலாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமீர்கான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!