கிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா! | dirty politics, mallika sherawat, டர்ட்டி பாலிடிக்ஸ், மல்லிகா ஷெராவத்,

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (27/12/2014)

கடைசி தொடர்பு:17:12 (27/12/2014)

கிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா!

‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பட்டி தொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனார் வித்யாபாலன். இப்போது அதே ஸ்டைலில், கிட்டத்தட்ட அதே பெயரில், அதாவது ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ என்னும் படம் கிளுகிளுப்பாகத் தயாராகி வருகிறது. ‘டர்ட்டி பிக்சருக்கு’ வித்யாபாலன் என்றால், ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்துக்கு மல்லிகா ஷெராவத். இது கொஞ்சம் ஏடாகூடாமான படம் என்பதால், முதலில் வித்யாவையே அணுகினாராம் இதன் இயக்குநர் பொக்காடியா. 'அதே ஸ்டைல் படமா?  நோ.... என் ஹஸ்பெண்ட்கிட்ட கேட்டுத்தான் சொல்லணும்!’ என்று வித்யா கைவிரித்துவிட, சட்டென பொக்காடியா மனதில் வந்து போனவர் மல்லிகா ஷெராவத். முழு கிளுகிளுக் கதையைக் கேட்டதும், ‘‘ஷூட்டிங் எப்போ?’’ என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் கிளம்ப ஆரம்பித்து விட்டாராம் மல்லிகா ஷெராவத்.
 


தேசியக்கொடி நிறத்தில் உள்ள துணியை மல்லிகா ஷெராவத் அணிந்து நடித்ததற்காக, ‘‘தேசியக்கொடியை அவமதித்துவிட்டார்’’ என்று நடுவில் இந்தப் படத்திற்குத் தடை விதித்து, இப்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது ‘டர்ட்டி பாலிடிக்ஸ்!’

‘‘இது எல்லா படங்களைப்போல் சாதாரணமான கவர்ச்சிப் படம் இல்லை. இந்தக் கிளு கிளுப்பு மூலம் கருத்தும் சொல்லியிருக்கிறோம்!’’ என்று 'டர்ட்டி பாலிடிக்ஸ்' பற்றி இயக்குநர் பொக்காடியா, பாலிவுட் தளத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில்,  சில வயதான வெள்ளை வெளேர் அரசியல்வாதிகளின் கறுப்பு ஏரியாவை அம்பலப்படுத்தும் அனோக்கிதேவி என்ற ஒரு ஏழைப் பெண் கேரக்டரில், படுக்கையறைக் காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம் மல்லிகா. 
 

 
வயதான அரசியல்வாதிகளாக ஓம்பூரி, ஜாக்கி ஷெராப், அனுபம்கெர் என்று மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதில் ஓம்பூரியுடனான நெருக்கமான காட்சிகளில் செம டர்ட்டியாக நடித்து, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ யூனிட்டிடம் பாராட்டுகளை வாங்கிக் குவித்துவிட்டாராம் மல்லிகா. ‘‘ஆரம்பத்தில் ஓம்பூரி சாருடன் படுக்கையறைக் காட்சியில் நடிப்பதற்கு ரொம்பவே தயக்கமாக இருந்தது. ஓம்பூரி சார்தான் என் தயக்கத்தைப் போக்கினார். இப்போது அவருடன் நடிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை!’’ என்று தில்லாகச் சொல்கிறார் மல்லிகா.

‘‘மல்லிகா ரொம்ப போல்டான பொண்ணு!’’ என்று பதிலுக்குப் பூரிக்கிறார் ஓம்பூரி. படம் எப்போ ரிலீஸ்னு கேக்கிறீங்களா? பிப்ரவரி 15 அல்லது 26 ரெண்டு தேதிகளும் பரீசிலனையில் உள்ளது. அப்போ தேசிய விருது வாங்கியே தீருவேன்னு சொல்லுங்க மல்லிகா ஜி.

- தமிழ்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close