ஷமிதாப் பெயர் காரணம் என்ன? - பால்கி பதில்! | ஷமிதாப், தனுஷ், அக்‌ஷரா ஹாசன், அமிதாப் பச்சன், ரேகா, shamitabh, dhanush, akshara hassan, amitabh bachchan ,

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (08/01/2015)

கடைசி தொடர்பு:12:56 (08/01/2015)

ஷமிதாப் பெயர் காரணம் என்ன? - பால்கி பதில்!

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரேகா, தனுஷ், மற்றும் அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் படம் ‘ஷமிதாப்’. படத்திற்கு இசை இளையராஜா. படத்தின் ஆடியோ டீஸர்கள் , மற்றும் வீடியோ பாடல் என இணையத்தில் புது டிரெண்டை உருவாக்கிய நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் ஜனவரி 6ம் தேதி வெளியானது. படத்தின் டிரெய்லர் வித்யாசமாக இருக்க இந்தி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி ரசிகர்களும் டிரெய்லருக்கு அமோக வரவேற்புகள் கொடுத்துள்ளனர். சமீபத்தில் தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் ’அமிதாப்ஜி தனுஷ் வாட் எ காம்பினேஷன், இந்த டிரெய்லர் என்னை வியப்பிற்கு ஆளாக்கியது” என பகிர்ந்திருந்தார். 

இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டில் அமிதாப் பச்சன் பேசும் போது, நானும் பால்கியும் இணைவது இது மூன்றாவது முறை ‘ சீனிகம்’, ‘பா’, இப்போது ‘ஷமிதாப்’. ஒவ்வொரு முறையும் என் கதாபாத்திரங்கள் மிகவும் வித்யாசமாகவே அமைத்துவிடுகிறார். அதே போல் நானும் , ரேகாவும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளோம். 

மீண்டும் எங்கள் இருவரையும் இணைந்து ஒரு படம் கொடுக்கவேண்டும் என பால்கியும் கூறியுள்ளார். அதேபோல் இந்த படத்திலும் ரேகா இருக்கிறார். ஆனால் எங்கள்  இருவருக்கும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. படம் பார்க்கும் தருவாயில் கண்டிப்பாக புரியும். கண்டிப்பாக இந்த படம் நல்ல படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

அதேபோல் படத்தின் இயக்குநர் பால்கியிடம் ‘ஷமிதாப்’ பெயர்காரணம் கேட்கபட்டது. அதற்கு முதலில் தனுஷின் பெயர் முன்னிலை படுத்துவது போல் ‘தமிதாப்’ , எனவும் பின் ’ஹமிதாப்’ எனவும் வைத்தோம் ஆனால் கேட்பதற்கு சற்றே வித்யாசமாக இருக்கவே படத்தின் பெயர் மிகவும் தனித்துவமாக ‘ஷமிதாப்’ என அமைந்தது என கூறியுள்ளார் இயக்குநர் பால்கி.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close