இங்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை - ஷமிதாப் டிரெய்லர் ரிலீஸில் தனுஷ்! | ஷமிதாப், அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன், shamitabh, akshra hasan, dhanush, amitabh bachchan ,

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (08/01/2015)

கடைசி தொடர்பு:13:20 (08/01/2015)

இங்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை - ஷமிதாப் டிரெய்லர் ரிலீஸில் தனுஷ்!

கொலவெறி பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த தனுஷ் ‘ரஞ்சனா’ படம் மூலம் இந்தி ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். தொடர்ந்து இப்போது ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார் தனுஷ். பால்கி இயக்கத்தில் அமிதாப், ரேகா, அக்‌ஷரா ஹாஸனுடன் தனுஷ் இணைந்து நடித்திருக்கும் படம். 

இப்படத்தின் தலைப்பிலேயே இந்தியின் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் தனுஷின் பெயர் முன்னிலைப்படுத்தி வெளியாக அதுவே அவருக்கு மிகப்பெரும் இடைத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சமீபத்திய டிரெய்லரின் காட்சிகளில் தனுஷ் , மற்றும் அமிதாப் இருவருக்குமான காட்சிகள் பிரம்மிக்க வைத்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸில் ஏன் தமிழில் நடிக்கும் படங்களில் மட்டும் சில கட்டுபாடுகள் வைத்துள்ளீர்கள் என கேள்விகள் வைக்கப்பட்டன. வித்யாசமான கெட்டப்கள் அதிகம் ஏற்பதில்லையே என தனுஷிடம் கேட்கபட்டது.

அதற்கு தனுஷ் , தமிழில் எனக்கென ஒரு இமேஜ் உருவாகிவிட்டது முடிந்த அளவு அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் கலவையான பாத்திரங்களில் நடிக்க முயன்று வருகிறேன். ஆனால் இந்தியில் எனக்கென இழப்பதற்கு எந்த இமேஜும் இல்லை, எனவே தான் எந்த கட்டுபாடுகளும் இல்லாமல் நடிக்கிறேன். என கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close