அனுஷ்கா ஷர்மா, விராட் கோஹ்லிக்கு தடை!

அடுத்த மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கு வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சில சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய அனுஷ்கா ஷர்மா, விராட் கோஹ்லி இருவராலும் சில பல சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பொதுவான அறிக்கை ஒன்றை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. உலக கோப்பையின் போது வீரர்களின் மனைவிகள் அல்லது தோழிகள் என யாரும் இணைந்து தங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ள இந்த போட்டிகளில் அனுஷ்கா ஷர்மா மற்றும் கோஹ்லி ஒன்றாக தங்குவது என்பது தற்போது சிக்கலாகி உள்ளது.

 

இந்த அறிவிப்பு ஏற்கனவே இருப்பதுதான் என்றாலும் இப்போது சற்றே கடினமாக உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் சிலர் இப்படி சின்ன விஷயங்களில் கூட ஏன் இவ்வளவு பெரிய வாரியம் தலையிடுகிறது என முணுமுணுக்கத் துவங்கியுள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!