“கான்களோடு நடிக்கவில்லை என்றாலும் நிலைத்து நிற்கிறேன்” பிபாஷா

கவர்ச்சி நடிகை மற்றும் மாடலாக இந்திய திரையுலகினை வலம் வருபவர் பிபாஷா பாசு. 2001ல் “அஜ்னபி” என்ற இந்தி படம் மூலமாக அறிமுகமாகி அந்த படத்திற்கான சிறந்த அறிமுக நாயகியாக விருதும் பெற்றார். தற்போது கரண் சிங் க்ரோவருடன் சேர்ந்து இவர் நடித்த “அலோன்” என்ற பேய் படம் கடந்த 16ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியின் சூப்பர் ஸ்டார்களான அமீர்கான், சல்மான் கான், மற்றும் ஷாருக்கான் பற்றி இவர் பேசியது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. “ கான்கள் நடிக்கும் படங்களில் நான் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் இன்னும் பாலிவுட்டில் நிலைத்து நிற்கிறேன், கான்களுடன் நடித்த பல நடிகைகள் திரையுலகிலிருந்தே காணாமல் போய்விட்டனர்.

அமீர்கானுடன் கிரேஸி சிங் நடித்து, ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த படம் “லகான்”. இந்த படத்தில் நடித்த கிரேஸி சிங் இன்று காணாமல் போய்விட்டார். கான்களுடன் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து என்ன பயன்? இன்றும் நான் திரையுலகின் சிறந்த நாயகியாக வலம் வருகிறேன்.” என பெருமையாக கூறியுள்ளார் பிபாசா. இது சில முன்னனி நடிகைகளை சற்றே முணுமுணுப்பிற்கு ஆட்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!