திரை விருதுகள் 2015! ஷாருக், தீபிகாவிற்கு சிறந்த நடிகர்கள் விருது!

இந்தி சினிமாவின் மரியாதைக்குரிய விருதுகளில் மிக முக்கியமான ஒன்று “ஓகே திரைவிருதுகள்”(Annual Life Ok Screen Awards). 21வது வருடத்திற்கான “ஓகே திரை விருது 2015” சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. ஷாருக்கான், ஹேமா மாலினி, தபு, மல்லிகா அரோரா கான், அலியா பட் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

கடந்த வருடத்திற்கான சிறந்த நடிகராக ஷாகித் கபூர் “ ஹைதர்” படத்திற்கும், சிறந்த நடிகைக்கான விருதினை ப்ரியங்கா சோப்ரா, “மேரி கோம்” படத்திற்காகவும் பெற்றனர்.

ரசிகர்களின் தேர்வாக, சிறந்த நடிகருக்கான விருதினை ஷாருக் கான் “ ஹாப்பி நியூ இயர்” படத்திற்காகவும், தீபிகா படுகோனே சிறந்த நடிகைக்கான விருதினை அதே படத்திற்காகவும் பெற்றார். 2009 முதல் ஆரம்பிக்கபட்ட இந்த  ரசிகர்கள் தேர்வு செய்யும் சிறந்த நடிகருக்கான விருதினை மூன்று முறை ஷாருக்கானே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முன்னனி நடிகையான ஹேமா மாலினிக்கு வாழ்நாள் சதனையாளர் விருதினை ஷாருக்கான் வழங்கினார்.கங்கனா நடித்து வெளிவந்த “குயின்” திரைப்படம் சிறந்த படமாகவும், இப்படத்தின் இயக்குநர் விகாஸ் சிறந்த இயக்குநருக்கான விருதினையும் தட்டிச் சென்றனர். இந்த நிகழ்ச்சி வருகிற 25ம் தேதி டிவிகளில் ஒளிபரப்பாக உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!