திருடப்பட்டதா ’பி.கே.’ ?

அமிர்கான் நடிப்பில் வெளிவந்த ‘பி.கே.’ ஹிந்தியில் வசூலில் சாதனைப் படைத்து, சிறந்த படமாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் மதம் சார்ந்தா கருத்துகளாலும், மூடநம்பிக்கைகளை சற்றே வெளிப்படையாக பேசிய போக்காலும் தமிழ், தெலுங்கு சினிமா உலகிலும் கூட ரீமேக் செய்யும் பேச்சுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே படத்தில் இந்து மதத்தை இழிவு படுத்தியுள்ளதாக எதிர்ப்புகள் அதிகரித்து, போராட்டம், முற்றுகை என நடந்தது. தற்போது இந்த படம் எனது “ஃபரிஷ்தா” என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று நாவலாசிரியர் கபில் இசபுரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து ‘பி.கே.’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி, தயாரிப்பாளர் வினோத் சோப்ரா, திரைக்கதையாசிரியர் அபிஜத் ஜோஷி ஆகியோருக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ல் வெளியான ‘ஃபரிஷ்தா’ என்ற நாவலைத் தழுவியே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாவலின் பல பகுதிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் கோரி நாவலாசிரியர் கபில் இஸாபுரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மதம் இயற்கையானது அல்ல, அது மனிதனால் உருவாக்கப்பட்டது, அது செயற்கையானது என்ற நாவலின் மையக் கருத்தே ‘பி.கே’ படத்திலும் கையாளப்பட்டுள்ளதாகவும், நாவலின் எழுப்பப்பட்டுள்ள பல பிரச்னைகளும் இந்த படத்தில் படமாக்கப்பட்டுள்ளது எனவே, எனக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாயை அப்படத்தின் தயாரிப்பாளர் தரவேண்டும் என்று கபில் இசபுரி மனுவில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!