அக்‌ஷராவை நினைத்து பெருமைப்படுகிறேன் - ஸ்ருதி ஹாசன்!

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன் , தனுஷ் , மற்றும் அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் படம் ‘ஷமிதாப்’ . ஒரு ஹீரோ, ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் இவர்களுக்கு இடையே நடக்கும் நட்பு, கருத்து வேறுபாடு என கதைக்களம் கொண்ட இந்த படத்தின் மூலம் தான் அக்‌ஷரா ஹாசன் ஹீரோயினாக முதல் முறையாக அறிமுகமாகிறார். 

இதன் டிரெய்லர், பாடல்கள் என இணையத்தில் செம ஹிட்டடித்து பரவி வருகிறது. இந்நிலையில் படத்தின் விழா மற்றும் இளையராஜா 1000 படங்கள் இசையமைப்பாளராக பணியாற்றிய சாதனை என பெரும் விழாவாக மும்பையில் சமீபத்தில் நடந்துள்ளது. 

இதில் ரஜினி, கமல், இளையராஜா, அமிதாப் பச்சன், தனுஷ், ஐஸ்வர்யா ராய், அபிஷேக், ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல முகங்கள் கலந்துகொண்டனர். மேலும் ‘ஷமிதாப்’ படத்தில் இளையராஜா இசையில் ‘சன்னட்டா’ என்ற பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன். 

இந்த பாடல் ‘ஜானி’ படத்தின் ‘ஆசைய காத்துல’ பாட்டின் டியூனில் அமைந்துள்ளது சிறப்பிற்குறிய விஷயம். படத்தில் அக்‌ஷரா குறித்து ஸ்ருதி ஹாசன் பேசும் போது,  “எனக்கு ‘ஷமிதாப்’ படத்தின் டிரெய்லர் பிடித்துபோய்விட்டது. மேலும் என தங்கையை நினைத்து நான் பெருமை படுகிறேன்.”

‘ஷமிதாப்’ குழுவிற்கு எனது நன்றிகள், என் படம் வெளியாகும் போதுகூட இவ்வளவு டென்ஷன் எனக்கு இல்லை. ஆனால் அக்‌ஷரா படம் வெளியாவதை நினைத்தால் படபடப்பாக இருக்கிறது, எனவும் தனது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!