அக்‌ஷய் நடித்த ’பேபி’ படத்திற்கு தடை! | அக்‌ஷய், பேபி, தாப்சி

வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (23/01/2015)

கடைசி தொடர்பு:18:53 (23/01/2015)

அக்‌ஷய் நடித்த ’பேபி’ படத்திற்கு தடை!

அக்‌ஷய் குமார் மற்றும் டாப்சி நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘பேபி’. இந்தியாவின் ரகசிய மிஷன் மூலமாக ஆபத்தான தீவிரவாதிகளை பிடிப்பது தான் கதைக் களம்.

இப்படம் பாகிஸ்தான் சென்சார் போர்டில் திரையிடுவதற்கு மறுத்துவிட்டனர். மேலும் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியில் ‘பேபி’ படத்தினை தடை செய்திருக்கின்றது அந்நாட்டு சென்சார் போர்டு குழு. இப்படத்தில் தவறான கதாப்பாத்திரத்திற்கு முஸ்லீம் பெயர்களை பயன்படுத்தியிருக்கின்றனர் என்று தடைவிதித்திருக்கின்றனர்.

பாகிஸ்தானில் ‘பேபி’ படம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அப்படத்தின் எவர்ரெடி பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அப்படத்தின் சிடி, டிவிடி மற்றும் போஸ்டர்கள் முதலான அனைத்துமே இஸ்லாமாபாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“ ‘பேபி’படம் பாகிஸ்தானுக்கு எதிரான படம் கிடையாது. தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் கதையே” என்று அப்படத்தின் இயக்குநர் நீரஜ் பண்டே தெரிவித்துள்ளார். மேலும் இது இஸ்லாமியத்தை எந்த வகையிலும் தவறாக காட்டவில்லை எனவும் கூறியுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close