உண்மையான ஷமிதாப் யார் ? - தனுஷ், அக்‌ஷரா , பால்கி பதில்!

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன், நடிப்பில் இளையராஜா இசையில் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் ‘ஷமிதாப்’. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. 

சந்திப்பில் படத்தின் இரு டிரெய்லர்கள் மற்றும் ஸ்ருதி பாடிய ‘சன்னட்டா’ வீடியோ பாடல் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா,  பால்கி, தனுஷ், மற்றும் அக்‌ஷராவிடம் பல கேள்விகளை கேட்டு கலகலப்பாக்கினார். 

உண்மையான ஷமிதாப் யார் என்ற கேள்விக்கு, தனுஷ் இப்படத்தை பொருத்தவரை இளையராஜாதான் என்று சொல்ல அதே கேள்வி அக்‌ஷராவிடம் கேட்டார் அதற்கு பால்கி என்றார். குழம்பிய பாவனா படத்தின் இயக்குநரிடமே கேட்டுவிடுவோமே என பால்கியிடம் கேட்க இப்படத்தை பொருத்தவரை தனுஷ் தான் என்றார். 

அடுத்த கேள்வியாக இந்த படத்திற்கு ஏன் தனுஷ்? என கேட்க , நீங்கள் மாற்றி கேட்க வேண்டும் ஏன் தனுஷ் இருக்கக்கூடாது? என்று பால்கி கூறினார். அவர் புத்திசாலியான, திறமையான நடிகர், இந்திய அளவில் பவர்ஃபுல்லான நடிகரும் கூட என்று தனுஷ் குறித்து பால்கி கூற மாணவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!