ஃபிலிம் பேர் விருதுகள்
இந்திய சினிமாவின் முக்கிய விருதுகளில் ஒன்று ஃபிலிம் பேர் விருதுகள். வருகிற ஜனவரி 31ம் தேதி நடைபெறவிருக்கிறது. 60வது ஃபிலிம் பேர் விருதிற்கான நாமினேஷன் முடிந்துவிட்டது. அதற்கான அறிமுக விழா மும்பையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஹயாத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் அலியாபட், பிரியங்கா, ஷாகிட் கபூர், தபு மற்றும் பல ஹிந்தி நட்சத்திரங்கள் வந்திருந்தனர். சிறந்த நடிகைக்கான விருதில், அலியாபட் “ஹைவே” படத்திற்கும், பிரியங்கா “ மேரிகோம்” படத்திற்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ‘ஹைதர்’ படத்திற்காக, ஷாகிட் கபூர் சிறந்த நடிகருக்கான பிரிவில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஃபிலிம் பேர்” ஆல்பத்திற்கு க்ளிக்: http://cinema.vikatan.com/articles/news/40/8432