பாரத ரத்னா விருதுக்கு நான் தகுதியற்றவன்: சொல்கிறார் அமிதாப்பச்சன்! | அமிதாப் பச்சன், ஷமிதாப், பேட்டி, amithab, amithab bachan

வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (28/01/2015)

கடைசி தொடர்பு:12:54 (28/01/2015)

பாரத ரத்னா விருதுக்கு நான் தகுதியற்றவன்: சொல்கிறார் அமிதாப்பச்சன்!

பாரத ரத்னா விருதுக்கு நான் தகுதியற்றவன் என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 2வது பெரிய விருதான ‘பத்மவிபூஷண்’ விருது பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு பத்மவிபூஷண் விருதுக்கு பதிலாக 'பாரத ரத்னா' விருதினை அறிவித்து கவுரவம் செய்திருக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.


இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் அமிதாப்பச்சன் ‘டிவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மம்தா அவர்களே, அத்தகைய (பாரத ரத்னா விருது) அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு தந்திருப்பதை மிகவும் கவுரவமானது என அடக்கத்துடன் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close