உலக மக்களின் மனம் கவரும் ராணி முகர்ஜி!

ராணி முகர்ஜியின் மாறுபட்ட நடிப்பினால் பெரிதும் பேசப்பட்ட படம் "மர்தானி". இப்படத்தினை பிரதீப் சர்கார் இயக்க சென்ற வருடம் ஆகஸ்டு மாதத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸீலும் ஹிட் அடித்தது. போலந்து நாட்டின் வர்சா என்ற நகரில் இப்படத்தின் "பிரீமியர் ஷோ" தற்போது திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் போலந்து நாட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான 'அர்டுர் ஜூராவ்ஸ்கி' தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினராக ராணிமுகர்ஜி கலந்துகொண்டார்.

'மர்தானி' படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பினைப் பார்த்து போலந்து மக்களில் பெரும்பாலானோர், இவரின் தீவிர ரசிகர்களாகிவிட்டனராம். பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலரது கேள்விகளுக்கு அர்டுர் ஜூராவ்ஸ்கியும், ராணி முகர்ஜியும் பதிலளித்தனர். ரசிகர்கள் பலர் ராணிமுகர்ஜியின் தைரியமான நடிப்பினை பாராட்டிப் பேசினர்.

போலந்து நாட்டின் பிரபலமான கிவோ முரனோவ் தியேட்டரில், அதுவும் பிரீமியர் ஷோவில் திரையிடப்பட்ட முதல் பாலிவுட் படம் என்ற பெருமையும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நடிகை என்ற பெருமையை ராணி முகர்ஜியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!