வித்யாபாலன் ஓபன் ஸ்டேட்மெண்ட்

இந்திய திரை உலகின் முடிசூடா ராணி வித்யாபாலன். ஒவ்வொரு படங்களிலுமே தன்னுடைய மாறுபட்ட நடிப்பில் வெரைட்டி காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை. சென்ற வருடம் இவர் நடித்து வெளிவந்த "பாபி ஜஸூஸ்' படம் ரசிகர்களின் பாராட்டுகளுடன் ,  கலைவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படத்தில் வித்யா 12 கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.

சமீபத்தில் இந்திய திரையுலகின் மரியாதைக்குரிய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் வித்யா பாலன் நடித்த "பாபி ஜஸோஸ்" படத்திற்கு ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. இந்த படத்திற்கு விருது கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.

விருது கிடைக்கவில்லையே என்று வித்யாபாலனிடம் கேட்டதற்கு, " நான் விருதுகளை குறிவைத்து நடிப்பவள் அல்ல. விருது கிடைக்கவில்லையே என்று வருந்துபவளும் அல்ல. விருது கிடைக்கவில்லை என்பதற்காக நான் சோர்ந்துவிடமாட்டேன். விருது வழங்குவது நடுவரின் தீர்ப்பை பொருத்தது. விருது பெறப்படவில்லை என்றால் என் படக்குழுவை பாதிக்குமே தவிர என்னை ஒரு துளியும் பாதிக்காது என்று போல்டாக செல்லியிருக்கிறார் வித்யா பாலன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!